Sunday, July 26, 2009

ரத்தத்தில்


ரத்தத்தில் கைநனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு

சோரம் தொழிலாகக் கொண்டதில்லை நான்
எனினும்
சோரம் போகிறவர்களிடம்
சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு

திருடிப்பிழைத்ததில்லை நான்
எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம்வாங்கி வாழநேர்கிறது எனக்கு

கூட்டிக்கொடுத்ததில்லை நான்
எனினும்
கூட்டிக்கொடுப்பவர்களின்
கூடத் திரிய நேர்கிறது எனக்கு

காட்டிக்கொடுத்ததில்லை நான்
எனினும்
காட்டிக்கொடுப்பவர்களின்
கருணையில் காலம் கழிக்க நேர்கிறது எனக்கு

பாபத்தில் வந்த பலனைக் கையாடினால்
பாபம் படியாதோ சாபம் கவியாதோ

முதலில் என்னை
நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்
என்னை
நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்

இல்லெங்கில்
எச்சில் பிழைப்புதான்
இரண்டும்கெட்டான் வாழ்க்கைதான்

5 comments:

  1. விக்கி என்ற விக்கிரமாதித்தனுக்கு,
    வாழ்த்துக்கள். தள நெறியாளருக்கு வேறு போட்டோ கிடைக்கவில்லையா? கவிதை தவிர, கட்டுரைகளையும் மீள் பதிவு செய்யுங்களேன். மேலும் உங்கள் அனுபவங்களை ஒரு தொடராக எழுதலாம்.(உங்கள் நண்பர் கோபால் போல்).

    ReplyDelete
  2. அண்ணாச்சி, நல்லாயிருக்கு கவிதை. நடிப்பெல்லாம் எப்படி போயிட்டிருக்கு.

    ஏக்நாத்.

    ReplyDelete
  3. யாரு... அண்ணாச்சியா... வாங்க.. வாங்க.. உங்களிடம் நேரடி அறிமுகம் உண்டு. ஞாபகம் உள்ளதா... திருவண்ணமலையில் ஒருமுறை ... மதுரையில் (கடவு நிகழ்ச்சியில்) ஒரு முறை. உங்களின் அனைத்து கவிதை தொகுப்பும் படித்து உள்ளேன். இந்த வலைப்பூவை செல்வராசு ஜெகதிசன் அவர்களின் வலைப்பூவில் கண்டேன். ஆனந்தம் கொண்டேன்.
    //....எச்சில் பிழைப்புதான்
    இரண்டும்கெட்டான் வாழ்க்கைதான்//
    என்ன செய்வது ... வாழ்ந்து 'தொலைக்க' வேண்டி இருக்கிறது அண்ணாச்சி.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சந்திப்போம்

    ReplyDelete
  5. பொறுப்பற்ற பொறுக்கி
    கிறுக்குவது கவிதை
    கிறுக்குற்ற பன்றி
    பொறுக்குவது பவ்வீ

    ReplyDelete